சென்னை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசுக்கள் அதிகப்படியாக உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு அவை, மாநகராட்சி அறிவுறுத்தலின்படி பராமரிப்பு செய்ய வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதனை கடைபிடிக்காமல் இருந்த வீடுகள், தனியார் இடங்களுக்கு மாநகராட்சியால் 50ஆயிரம் ரூபாய் முதல் அபராதங்கள் விதிக்கப்பட்டு வந்தன. அதன்படி கடந்த வாரம் வரை விதிக்கப்பட்டிருந்த அபராதத்தொகையானது சுமார் 25லட்சம் ரூபாயாக இருந்தது. தற்பொழுது அபராதத்தொகை 27லட்சமாக உயர்ந்துள்ளது.