சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றின் தினசரி பாதிப்பு குறைந்துவருகிறது. நேற்றைய நிலவரப்படி, 20 ஆயிரத்து 421 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. குறிப்பாக சென்னையில் மட்டும் ஆயிரத்து 644 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
கரோனா பரவல் அதிகமாக இருந்தபோது மருத்துவமனைகளில் போதிய இடம் இல்லாததால், பொதுமக்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். கரோனா பாதிப்புக்கு உள்ளான பலரும் இது குறித்த தகவலை அரசுக்குத் தெரியப்படுத்தாமல் தாங்களாகவே மருத்துவமனைகளில் மருந்துகளைப் பெற்று சிகிச்சை எடுத்துவருவதாகத் தகவல் வெளியானது.