சென்னை:Covid-19 precautions:சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மாநகராட்சி அந்தந்த பள்ளி, கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
Covid-19 precautions: பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் - மாநகராட்சி கடிதம் - கோவிட் எச்சரிக்கை
Covid-19 precautions: பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி கடிதம் வாயிலாகத் தெரிவித்துள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்
இது தொடர்பாக மாநகராட்சி அனுப்பிய கடிதத்தில்,
- ’கல்லூரிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கட்டாயம் கோவிட் தடுப்பூசி செலுத்தவேண்டும். மாணவர்கள் வகுப்பறைகள், நூலகம், விளையாட்டு மைதானம், ஆய்வகங்கள் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறார்களா, முகக்கவசம் அணிகிறார்களா என்பதை ஆசிரியர்கள் கவனித்து உறுதி செய்ய வேண்டும்.
- கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதை கல்லூரிகள் தவிர்க்க வேண்டும்.
- விடுதிகளில் சாப்பிடும்போது சில்வர் தட்டுக்குப் பதில் மாணவர்களுக்கு ஒரு முறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் வாழை மட்டையால் ஆன தட்டுகளை வழங்கவேண்டும். ஒரே தட்டை பலர் உபயோகிக்கும்போது தொற்று எளிதில் பரவுவதற்கான அபாயம் உள்ளது.
- வகுப்பறைகளில் குளிர்சாதனக் கருவிகளை செயல்படுத்தக்கூடாது.
- சரியான கால இடைவெளியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலன் தொடந்து பரிசோதிக்கப்பட வேண்டும்.
- கல்லூரிகள் தங்கள் வளாகத்தில் சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாமை நடத்த விரும்பினால் மாநகராட்சியைத் தொடர்புகொள்ளலாம். அதற்கு ஏற்றவாறு ஏற்பாடு செய்யப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:குர்குர்ரே ஆலையில் விபத்து - 10 பணியாளர்கள் உயிரிழப்பு