நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி பண்டிகை எப்ரல் 6 ஆம் தேதி கொண்டப்படுவது வழக்கம். இதனையொட்டி அன்றைய தினம் சென்னையில் உள்ள மீன் கடைகள், ஆடு, கோழி இறைச்சிக் கடைகள் மூடப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மக்களிடம் சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறது.
அந்த வகையில், சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ உத்தரவு இல்லாத இறைச்சிக் கூடங்களிலிருந்து பொருள்கள் பெற்று விற்பனை செய்யப்படும் ஆடு, மாடு இறைச்சிக் கடைகள் சீல் வைத்து மூடப்படும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு உடனடியாக சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இதேபோல், நாமக்கல்லில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 22 இறைச்சிக் கடைகளை அம்மாவட்ட நிர்வாகம் மூட நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சென்னையில் 8 இடங்கள் மூடப்பட்டு சீல்!