தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அலுவலர்கள் ஆய்வு...! - தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அங்கு வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு அரசு ஆணை
ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அதிகாரிகள் ஆய்வு

By

Published : Sep 29, 2020, 10:19 PM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போயஸ் தோட்டத்தில் வசித்து வந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மேலும் நினைவு இல்லமாக மாற்றுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தென் சென்னை வருவாய் கோட்டாட்சியர், வேதா இல்லத்தில் இன்று (செப்.29) ஆய்வு மேற்கொண்டார். வேதா இல்லத்தில் நினைவு இல்லமாக மாற்றும் பணிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது. இருந்தபோதிலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் தீபக் ஆகியோர் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை விதிக்க உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு அண்மையில் வெளியாகியுள்ளது.

அதில், உயர் நீதிமன்றம் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எந்த தடையும் இல்லை என்று உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.


இதையும் படிங்க...பாலியல் தொழிலாளிகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க உச்ச நீதிமன்றம் மாநிலங்களுக்கு வலியுறுத்தல்...!

ABOUT THE AUTHOR

...view details