சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், ‘தூய்மை சென்னை’ என்ற திட்டத்தின் மூலம் சென்னையை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளை கொட்டினால், அதற்கு அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, பொது இடங்களில் 1 டன் அளவிற்கு குறைவான கட்டிடக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது ரூ. 2 ஆயிரமும், அதற்கு மேல் கொட்டுபவர்களுக்கு ரூ. 5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி அறிவிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள், குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டிடக் கழிவுகளை பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 15 இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும்.
இதை மீறுவோர் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் துணை விதிகள் 2019ன் படி அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் 1 டன் அளவிற்கு குறைவான கட்டிடக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது ரூ. 2 ஆயிரமும், அதற்கு மேல் கொட்டுபவர்களுக்கு ரூ. 5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டிடக் கழிவுகளை கொட்ட ஒதுக்கீடு
செய்யப்பட்ட இடங்களின் விவரங்கள் பின்வருமாறு:
1. திருவொற்றியூர் - திருவொற்றியூர் பக்கிங்ஹாம் கால்வாய் சாலை சாத்தங்காடு.
2. மணலி காமராஜ் சாலை, மணலி, (மண்டல அலுவலகம். 2 அருகில்).
3. மாதவரம் - சி.எம்.டி.ஏ.டிரக் முனையம், இரவு காப்பகம் அருகில், மாதவரம் பேருந்து முனையம் பின்புறம்.
4. தண்டையார்பேட்டை வடக்கு அவென்யூ சாலை, மகாகவி பாரதி நகர், வியாசர்பாடி.
5. இராயபுரம் - கால்நடை டிப்போ (பகுதி) அவதான பாப்பையா சாலை, (சென்னை மாநகராட்சி பள்ளி எதிரில்).
6. தி.ரு.வி.க நகர் - கால்நடை டிப்போ (பகுதி) அவதான பாப்பையா சாலை, (சென்னை மாநகராட்சி பள்ளி எதிரில்).
7. அம்பத்தூர் CTH சாலை, (உழவர் சந்தை அருகில்).
8. அண்ணாநகர் முதல் பிரதான சாலை ஷெனாய் நகர், (கெஜலட்சுமி காலனி அருகில்).