தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேட்பாரற்ற வாகனங்களை ஏலம்விட்டதில் மாநகராட்சிக்கு ரூ.68 லட்சம் லாபம்! - சென்னையில் கேட்பாரற்ற வாகனங்கள் ஏலம்

சென்னை: சாலையோரத்தில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை ஏலம்விட்ட பணத்தில் ரூ.68.33 லட்சம் பங்குத் தொகையை சென்னை மாநாகராட்சிக்கு காவல் ஆணையர் விஸ்வநாதன் வழங்கினார்.

Chennai corporation vehicle auction, சென்னை மாநகராட்சி வாகனங்கள் ஏலம்
Chennai corporation vehicle auction

By

Published : Dec 9, 2019, 5:05 PM IST

சென்னை சாலையோரங்களில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை ஏலம்விட்டதில் கிடைத்த 91 லட்சம் பங்குத் தொகையை மாநகராட்சியிடம் காவல் ஆணையர் விஸ்வநாதன் வழங்கினார்.

சென்னை மாநகரப் பகுதிகளில் சாலைகளில் கேட்பாரற்று விட்டுச்செல்லப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் போக்குவரத்துக் காவல்துறையால் கைப்பற்றப்பட்டது.

இதற்கு உரிமையானவர்கள் உரிய ஆவணங்களுடன் வந்து வாகனங்களைப் பெற்றுச் செல்ல அறிவுறுத்தப்பட்டும் யாரும் வராததாலும், மேற்படி வாகனங்கள் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணங்களாலும் முதற்கட்டமாக ஏறக்குறைய ஏழாயிரத்து 785 வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டன.

இதன்மூலம், ரூ. 2.14 கோடி ரூபாய் ஈட்டப்பட்டது. அதில் மாநகராட்சிப் பங்குத் தொகையான ரூ. 1.60 கோடி ரூபாய் அடிப்படைப் பணிகள் மேம்பாட்டிற்காக வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக மூன்றாயிரத்து 79 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இதன்மூலம், ரூ. 91.11 லட்சம் ரூபாய் ஈட்டப்பட்டது. இதில், மாநகராட்சிக்கு சுமார் 75 விழுக்காடு அதாவது 68.33 லட்சம் ரூபாய் பிரித்தளிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தொகைக்கான காசோலையை, மாநகராட்சி ஆணையர் பிராகாஷிடம் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று வழங்கினார்.

இதையும் படிங்க : பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற தென் ஆப்பிரிக்க அழகி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details