மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருப்பதால், அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மூன்றாம் கட்ட நடவடிக்கையாக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, பல நாட்களாக அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மூடிக்கிடப்பதால், இலவச மதிய உணவு வழங்குவதற்காக அந்தப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் சத்துணவுப் பொருட்கள் பயன்படுத்தப்படாமலேயே உள்ளன.
இந்நிலையில், இந்த உணவுப் பொருட்களைப் பயன்படுத்தும் வகையில் வைத்திருக்க வேண்டும் எனச் சென்னை மாநகராட்சி சத்துணவுத் துறை, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அந்தச் சுற்றறிக்கையில், "சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் இருப்பில் உள்ள அனைத்து உணவுப் பொருட்களையும் நல்ல நிலையில் உலர்த்தி பயன்படுத்துவதற்கு ஏதுவான வைக்க அனைத்து சத்துணவு பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது" எனக் குறிப்பிட்டிருந்தது.
இதையும் படிங்க : லேசான கரோனா அறிகுறியா? - வீட்டிலேயே தனிமைப்படுத்த அரசு உத்தரவு
!