சென்னை மாநகராட்சி பல்வேறு வகையில் சென்னையை தூய்மைப்படுத்தும் பணிகளை கையில் எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கைவிடப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து இப்பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், கோடம்பாக்கம் மண்டலம், பிராகசம் சாலையில் 3 வாகனங்களும், ஜி.என்.செட்டி சாலையில் 2 வாகனங்களும் ஒய் பாளம் அருகில் ஒரு வாகனம், மாம்பலம் பிரதான சலையில் 2 வாகனங்கள், கண்ணதாசன் தெருவில் 2 வாகனங்கள் ஆகியவற்றை காவல் துறை உதவியுடன் இன்று (செப். 9) அப்புறப்படுத்தப்பட்டன. கோடம்பாக்கம், மண்டலம் பனகல் பார்க் அருகில் உள்ள பிரகாசம் சாலையில் காவல் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகளை இன்று பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் செய்தியாளரிடம் பேசியதாவது, “பெருநகர சென்னை மாநகராட்சியின் 2022-23ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கைவிடப்பட்ட வாகனங்கள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.