கரோனா வைரஸ் சென்னை முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பரவலைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் நோய் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் 10 அரசு ஆய்வகங்களும் 13 தனியார் ஆய்வுகளும் என 23 கரோனா ஆய்வகங்கள் சென்னையில் கரோனா பரிசோதனை செய்துவருகிறது. இந்த ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வரும் நபர்கள் தங்கள் முழு விவரத்தையும் கொடுக்க வேண்டும். ஆனால் கரோனா சோதனை செய்துகொள்ளும் சிலர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த நேரிடும் என்பதற்காக கைபேசி எண்ணையும் முகவரியையும் தவறாக கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஜூன் மூன்றாம் தேதி மாநகராட்சி கரோனா பரிசோதனை செய்வதற்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்கியது.
இந்த நிலையில் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வரும் நபர்களுக்காக புதிய படிவத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.