தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பூசி: முதலிடத்தில் சென்னை!

இந்தியாவிலேயே 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் சென்னை முதலிடத்தில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போடுவதில் சென்னை முதலிடம்
தடுப்பூசி போடுவதில் சென்னை முதலிடம்

By

Published : May 28, 2021, 12:44 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணியில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். மக்களும் ஆர்வாமாக சென்று தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் நேற்று (மே. 27) ஒரே நாளில் தமிழ்நாட்டில் 3 லட்சத்து 23, 915 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாவில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

சென்னையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில், இதுவரை 55 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 81 லட்சத்து 40 ஆயிரத்து 164 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:இதுவரை 3,080 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கிடைத்துள்ளன - சென்னை மாநகராட்சி

ABOUT THE AUTHOR

...view details