சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று (அக்டோபர் 28) இரவு முழுவதும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதகளில் மழைநீர் தேங்கி வெள்ளம்போல் காட்சியளித்தது. இதனிடையே, பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை குறித்த புகார்கள் தெரிவிக்க அவசர எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, 044 2538 4530, 044 2538 4540. & 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு மையத்தினையும் (1913) பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த 2014ஆம் ஆண்டு 851 இடங்களில் பருவ மழை காலங்களில் மழை நீர் தேங்கி இருந்தது. 2017ஆம் ஆண்டு பெய்த மழையால் 306 இடங்களில் மழை நீர் தேங்கி இருந்தது.