சென்னை:சென்னை சைதாப்பேட்டை அப்பாவு நகர் வழியாகச் செல்லும் மாம்பலம் கால்வாயில் ஆய்வு மேற்கொண்டு வரும் கொசுபுழு ஒழிப்பு பணிகளைச் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் மேற்பார்வையிட்டார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது பேசிய அவர்,
"உள்ளாட்சி அமைப்புகளில் தேவையான அனைத்து வசதிகளும் உடனடியாக செய்து தரவேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் சைதாப்பேட்டை அப்பாவும் நகரில் பகுதியில் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதாக மக்கள் புகார் எழுப்பினர், இந்த நிலையில் இங்கு வந்து நேரில் ஆய்வு செய்தேன்.
சென்னை முழுவதும் கொசு ஒழிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொசு இல்லாத நகரமாக மாற்றுவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம். இந்த பணிக்காக 3463 பணியாளர்கள் பணியில் உள்ளனர், மேலும் 67 கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் உள்ளது மேலும் தேவைப்பட்டால், தேவைக்கேற்ப இயந்திரங்களும் வாங்கப்படும். இரண்டு நாட்களுக்கு முன்னர் பதவியேற்றவுடன் கொசு அதிகமாக உள்ளது எனப் புகார்கள் வந்து கொண்டிருந்தது, இதனை அடுத்து இந்த பணியை முதலில் தொடங்கப்பட்டது.