சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் கல்லூரியில் ஜெயின் சமூகத்தினர் சார்பாக வழங்கப்பட்ட 30 நடமாடும் மருத்துவ வாகனங்களின் இயக்கத்தை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், "சென்னை மாநகராட்சி கரோனா தடுப்பு பணியில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 6 அமைச்சர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, 15 மண்டலங்கில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 45,000 சோதனைகள் நடத்தப்படுகின்றன.
சென்னையில் இறப்பு விகிதம் குறைந்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. கரோனா அதிகமாக பரவி வரும் மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் பரிசோதனை அதிகப்படுத்துவது, சிகிச்சை மையங்கள் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் எடுத்து வரும் நடவடிக்கை போன்றே அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்