தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னை செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கரகாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல் வாக்காளர்களுக்கு அடையாள அட்டையை மாநகராட்சி ஆணையர் வழங்கினார், மேலும் பல்வேறு துறையில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
தேர்தல் பணியை தொய்வின்றி செய்ய வேண்டும் - மாநகராட்சி ஆணையர் - தேர்தல் பணி
சென்னை: கரோனா, புயல் காலத்தில் எவ்வாறு கையாண்டோமோ அதேபோல் இந்தத் தேர்தல் பணியும் தொய்வின்றி செய்ய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
![தேர்தல் பணியை தொய்வின்றி செய்ய வேண்டும் - மாநகராட்சி ஆணையர் Chennai Corporation](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10376296-977-10376296-1611580997344.jpg)
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆணையர் பிரகாஷ், "தேர்தல் கல்வியறிவு மன்றம் - வாக்காளர் பட்டியல் மேலாண்மை பணிகளுக்காக ஆளுநர் நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் மேகநாதன் ரெட்டிக்கு விருது வழங்கப்பட்டது. மாநகராட்சிக்கு கிடைத்த பெரிய விருது இது, கரோனா காலத்தில், புயல் காலத்தில் பணியாற்றிய அதே ஊழியர்கள் தற்போது இந்தத் தேர்தல் காலத்தில் உள்ளார்கள். எனவே கரோனா, புயல் காலத்தில் எவ்வாறு கையாண்டோமோ அதேபோல் இந்த தேர்தல் பணியிலும் தொய்வின்றி செயல் படுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது" என்றார்.