இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”நிவர் புயல் தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம்கொள்ள வேண்டாம்.
மக்களே பயப்படாதீங்க... நிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்!
சென்னை: நிவர் புயல் தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்
மாநகரில் உள்ள 200 வார்டுகளிலும் 600 வாட் திறன் கொண்ட உயர் ரக மோட்டார் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. பேரிடர் மீட்பு குழுவினர், மாநகராட்சி ஊழியர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் தயார் நிலையில் உள்ளனர். இதுவரை 9 செ.மீ. அளவுக்கு மழை பெய்த நிலையில், தாழ்வான பகுதியைத் தவிர வேறெந்த பகுதியிலும் நீர் தேங்கவில்லை.
செம்பரம்பாக்கம் ஏரியில் 6:00 மணி நிலவரப்படி மொத்த கொள்ளளவு 85.40 அடியில் 82.62 அடி நிரம்பியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 220 கனஅடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 106 கனஅடியாக உள்ளது அதில் மெட்ரோவிற்கு மட்டும் 91 கன அடி வெளியேற்றப்படுகிறது” என குறிப்பிடப்பட்டிருந்தது.
- இதையும் படிங்க:நெருங்கும் ’நிவர்’ புயல் - தற்போதைய நிலை என்ன?