தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Increase RT-PCR tests: ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

Increase RT-PCR tests: சென்னையில் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் 22,000 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை 25,000ஆக அதிகரிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மாநகராட்சி ஆணையர்
மாநகராட்சி ஆணையர்

By

Published : Dec 29, 2021, 11:01 PM IST

Increase RT-PCR tests: கரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது, "நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் 22,000 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை 25,000ஆக அதிகரிக்க வேண்டும்.

மார்க்கெட் பகுதிகள், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வங்கிகள் உள்ளிட்ட இடங்களைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

கரோனா தொற்றுப் பாதித்த நபர்களுக்கு முதற்கட்ட உடற்பரிசோதனை செய்யும் மையம் (Screening Centers) ஏற்கெனவே 11 இடங்களில் செயல்பட்டு வருகிறது.

தற்போது தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாளை (டிசம்பர் 29) முதல் மேலும் 15 இடங்களில் முதற்கட்டப் பரிசோதனை மையங்களை செயல்படுத்த வேண்டும்.

தொற்றுப் பாதித்த நபர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்களுக்கு அலுவலர்கள் அழைத்துச் செல்ல வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:PM Modi coming to TN Next Month: 'எங்களது கோரிக்கைகளை ஒன்றிய அரசினை ஏற்க வைப்போம்' ஜோதிமணி சூளுரை!

ABOUT THE AUTHOR

...view details