சென்னை: நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் மாநகராட்சிக்கு உட்பட்ட அடையாறு, கூவம் மற்றும் நேப்பியார் பாலம் அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை ஆணையர் ககன் தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
நீர் மேலாண்மை பணிகள் குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த ககன் தீப் சிங் பேடி, "நேற்று (ஜுன் 26) அமைச்சர் கே.என் நேரு உடனான ஆய்வு கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தேன்.
நீர் வழி பாதைகளில் நடைபெற்று வரக்கூடிய சீரமைப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் - ககன் தீப் சிங் பேடி
அடையாறு, கூவம், நேப்பியார் பாலம் அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்
இதையும் படிங்க: அடுத்தடுத்து குண்டு வெடிப்பு.. ஜம்முவில் பதற்றம்..