தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாதவரம் மண்டலத்தில் ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு - chennai

மாதவரம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இன்று ஆய்வு செய்தார்.

மாதவரம் மண்டலத்தில் ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு
மாதவரம் மண்டலத்தில் ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு

By

Published : Jun 29, 2021, 5:35 PM IST

சென்னை: மாதவரம் 3 ஆவது மண்டலத்திற்கு உட்பட்ட 24 ,25 ,26, 33 வார்டுகளில் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அங்கு மழை நீர் கால்வாய் சீரமைப்பு பணிகளைப் பார்வையிட்டார்.

புழல் அடுத்த லஷ்மிபுரம் இரட்டை ஏரியில் கழிவு நீர் சாக்கடையில் கலப்பதாலும், குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவாதாக சிலர் மாநகராட்சிக்கு புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் ஏரியை நேரில் ஆய்வு செய்தார்.

மேலும் மாதனான்குப்பத்தில் இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள நீர்வழிப் பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்கும் படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

24 ஆவது வார்டில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா, நகர்ப்புற மருத்துவமனையை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது, மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் சுதர்சனம், மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: சூரப்பா மீீீதான அறிக்கைத் தயார்

ABOUT THE AUTHOR

...view details