தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை சீரமைக்கும் பணிகளை நள்ளிரவில் நேரில் ஆய்வு செய்த மாநராட்சி ஆணையர் - Chennai Corporation Commissioner Gagandeep Singh Bedi inspects road construction work

சாலை சீரமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நள்ளிரவில் நேரில் ஆய்வு செய்தார்.

சாலை சீரமைக்கும் பணிகளை நள்ளிரவில் நேரில் ஆய்வு
சாலை சீரமைக்கும் பணிகளை நள்ளிரவில் நேரில் ஆய்வு

By

Published : Jan 8, 2022, 7:35 AM IST

சென்னை: நவம்பர் மாதம் பெய்த கன மழையினால் சென்னையில் பல்வேறு சாலைகள் சேதம் அடைந்தன. அதைச் சீரமைக்கும் பணிகளும், புதிய சாலைகள் போடும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சென்னை அண்ணா நகர் சாந்தி காலனியில் நேற்று ஊரடங்கில் நடைபெற்று வரும் புதிய சாலை போடும் பணிகளைச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.

சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக ஆய்வு நடத்திய ககன்தீப் சிங் பேடி சாலைகளின் உறுதி தண்மை, நீளம், அளவு என அனைத்தும் சரியாக உள்ளதா என அலுவலர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தார், பின்னர் அறிவுரைகளும் வழங்கினார்.

நேரில் ஆய்வு செய்த மாநராட்சி ஆணையர்

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் ககன்தீப் சிங் பேடி, "நவம்பர், டிசம்பர் மாதம் மழையினால் சென்னையில் சாலைகள் பாதிப்பு அடைந்துள்ளன. சாலைகள் புதுப்பிக்க பணிகள் தொடங்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தல் படி பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.204 கோடி செலவில் 173 பேக்கேஜ் டெண்டர் விடப்பட உள்ளது. தற்போது வரை 90 பேக்கேஜ் டெண்டர் முழுமை பெற்று பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

சாலை சீரமைக்கும் பணிகளை நள்ளிரவில் நேரில் ஆய்வு

தமிழ்நாடு அரசின் பல்வேறு நிதி உதவிகள் மூலம் சென்னையில் மழைக்குப் பிறகு 1655 சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது மட்டுமின்றி மழைக்கு முன்பு நடைபெற்று வந்த 1200 சாலைகள் சீரமைக்கும் பணிகளும் தற்போது தொடங்கியுள்ளன. இரவு நேரத்தில் முக்கிய சாலைகளைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்பார்வையாளராக ஐஏஎஸ், மண்டல ஆணையர்கள் உள்ளனர்.

சாலை சீரமைக்கும் பணிகளை நள்ளிரவில் நேரில் ஆய்வு

குறிப்பாகச் சாலைகளில் மில்லிங் முறை பயன்படுத்தி சரி செய்யப்படுகிறது. மில்லிங் என்றால் சேதமான சாலையை அப்புறப்படுத்தி அதே உயரத்தில் சாலை அமைப்பது ஆகும். தொடர்ந்து நடைபெறும் பணிகளை ரோந்து பணிகள் மூலம் ஆய்வு செய்கின்றோம். ஜனவரி மாதத்திற்குள் முடிந்த வரையில் பணிகள் முடிக்க இலக்கு உள்ளது. சில சாலைகளில் நிரந்தர மழை நீர் வடிகால் தேவை உள்ளது.

மேலும், அசோக் நகர், ஹசிவ் நகர், ராஜா அண்ணாமலை சாலை உள்ளிட்ட பல்வேறு தெருக்களின் சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அமைத்த குழு அறிக்கை கொடுத்துள்ளது. மேற்கொண்டு அரசு அந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்த உடன் அந்த பணிகளும் தொடரும். சாலை போடும் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'அந்தப் பயம் இருக்கட்டும்'- விஜய் டயலாக்கை கையிலெடுத்த ஜோதிமணி!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details