தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 10, 2020, 11:56 AM IST

ETV Bharat / state

பொதுக் கழிப்பிடங்களை பராமரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு - மாநகராட்சி ஆணையர்

சென்னை: பொதுக் கழிப்பிடங்களை மேம்படுத்த தனியார் வங்கிகளுக்கும், நிறுவனங்களுக்கும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

மாநகராட்சி ஆணையர்
மாநகராட்சி ஆணையர்

சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். அதில், பொதுக் கழிப்பிடங்களை மேம்படுத்த சி.எஸ்.ஆர் நிதியை பயன்படுத்துமாறு தனியார் நிறுவனங்களை வலியுறுத்தினார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 853 பொதுக் கழிப்பிடங்களில் 6641 கழிவறைகள் உள்ளன.

இந்திய அரசின் நிறுவனங்களின் விதிப்படி சமூகப் பணிகளுக்காக நிறுவனங்களின் 2 விழுக்காடு நிதியை அரசுக்கு பயன்படுத்தலாம் எனவும், அவற்றை பொதுக் கழிப்பிடங்களை மேம்படுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் செலவிடுவதுடன் மட்டுமின்றி சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் விளம்பரங்கள், வங்கிகளின் இயந்திரங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட பொதுக் கழிப்பிடங்களை விருப்பம் உள்ள நிறுவனங்கள் மேம்படுத்த சென்னை மாநகராட்சியின் இணையத்தில் www.chennaicorporation.gov.in பதிவு செய்யலாம். இதுபோன்ற பெருநிறுவன சமூகப் பங்களிப்புத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே சில நிறுவனங்கள் கோடம்பாக்கம் மண்டலத்தில் பொதுக் கழிப்பிடங்களைப் பராமரிப்பு செய்து வருகிறது என்பதால் மற்ற நிறுவனங்களும் இச்சமூகப் பணியில் பங்கேற்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் மீண்டும் ஏசி பேருந்துகள்: முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆய்வு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details