சென்னையில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வணிக நிறுவனங்களும், கடைகளும் மார்ச் 31ஆம் தேதி வரை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தியாகராய நகர் பகுதியிலுள்ள வணிகர்களை நேரில் சந்தித்து கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடைகளை விரைவில் அடைக்குமாறு வலியுறுத்தினர்.
பின்னர், மாநகராட்சியின் பூச்சித் தடுப்புத் துறையினர் தியாகராய நகர் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், அடைக்கப்பட்டுள்ள கடைவீதிகள் ஆகிய இடங்களில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தனர்.