தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை உணவு திட்டம் - சென்னை மாநகராட்சி விளக்கம்! என்ன தெரியுமா? - privatization issues

Corporation schools Morning Meals: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் இத்திட்டமானது தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.

chennai-corporation-clarifies-corporation-schools-morning-meals-privitization-issues
காலை உணவு திட்டம் - சென்னை மாநகராட்சி விளக்கம்! என்ன தெரியுமா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 11:05 PM IST

சென்னை :சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ள அறிக்கையில், "பெருநகர சென்னை மாநகராட்சியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் முன்னோடி திட்டமாக 37 பள்ளிகளில் மாநகராட்சியின் சார்பில் காலை உணவு தயாரித்து தினசரி வழங்கப்பட வேண்டிய உணவுப் பட்டியலின்படி இதற்காக அமைக்கப்பட்ட உயர் அலுவலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தற்போது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் 358 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 65,030 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், நிர்மாணிக்கப்பட்ட 35 சமையல் கூடங்களிலிருந்து, தினசரி உணவு வழங்கப்பட வேண்டிய அட்டவணையின்படி உயர் அலுவலர்களின் கண்காணிப்பில் காலை உணவு தரமாக தயாரித்து வழங்கும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்பணியில் உயர் அலுவலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்புடன் ஒப்பந்த அடிப்படையில் காலை உணவு தரமாகத் தயாரித்து வழங்குவதற்கான நிலை ஏற்படுமாயின் அதற்கான உத்தேச மதிப்பீடு தயாரித்து அதற்கான ஒப்புதல் பெருநகர சென்னை மாநகராட்சியின் மன்றத்தில் பெறப்பட்டது.

இதற்கான ஒப்பந்தப் புள்ளி ஏதும் தற்போது கோரப்படவில்லை. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்படும்" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :"சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரம்" - மாநகராட்சி ஆணையர்

ABOUT THE AUTHOR

...view details