தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"வரவேற்பு இல்லாத அம்மா உணவகங்களை மூட வேண்டும்" - மேயர் பிரியா பதில் என்ன? - சென்னை மேயர் பிரியா

சென்னையில் அம்மா உணவகங்கள் 786 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதால், வருவாய் மிக குறைவாக உள்ள அம்மா உணவகங்ளை மூட வேண்டும் என சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கணக்கு குழு தலைவர் தனசேகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

By

Published : Nov 29, 2022, 4:35 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனைகள், சுற்றுலா இடங்கள் என 400-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. பல அம்மா உணவகங்களில் பொதுமக்களிடம் வரவேற்பு இல்லாமல் வருவாயே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் பேசிய கணக்குக்குழு தலைவர் தனசேகரன், சென்னையில் அம்மா உணவகங்கள் 786 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. பல அம்மா உணவகங்கள் நாளொன்றுக்கு 500 ரூபாய்க்கும் கீழ் வருமானம் வரும் நிலையில் உள்ளது. அதனால், மக்களிடம் வரவேற்பு இல்லாத பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களை மட்டும் மூட வேண்டும் எனவும், அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, "அம்மா உணவகம் தொடங்கியதில் இருந்து எப்படி செயல்பட்டு வருகிறதோ, அவ்வாறே தொடர்ந்து செயல்படும். பொதுமக்களிடம் வரவேற்பு இல்லாத அம்மா உணவகங்களில் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கணக்குக்குழு தலைவர் தனசேகரன், "வருவாய் குறைவாக இருக்கும் பகுதிகளில் அம்மா உணவகங்களை குறைப்பதற்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். அம்மா உணவகங்களை மூடும் எண்ணம் எங்களுக்கு இல்லை. நீண்ட காலம் வரி செலுத்தாமல் இருக்கும் நபர்களுக்கு எப்படி மின்வாரிய மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறதோ, அதேபோல ஓராண்டிற்கு மேலாக சென்னை மாநகராட்சிக்கு வரி செலுத்தாத நபர்களுக்கும் ஏன் மின் இணைப்பை துண்டிக்க கூடாது? என்றும் கேள்வியை வைத்துள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க:கோவிலுக்காக யூடியூபர் வசூலித்த தொகையை நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details