தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாசற்ற தீபாவளியைக் கொண்டாட வேண்டும் - சென்னை மாநகராட்சி - பெருநகர சென்னை மாநகராட்சி

பொதுமக்கள் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விபத்து ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்
விபத்து ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்

By

Published : Oct 21, 2022, 10:06 PM IST

சென்னை: தீபாவளி கொண்டாட்டம் குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,“உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசால் தீபாவளி பண்டிகை தினத்தன்று கடந்த ஆண்டைப் போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலைப் பாதிப்பு இல்லாமல் பேணி காக்கப் பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் கூடிய பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

மாநகராட்சியின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள நலச் சங்கங்கள் மூலம் முயற்சிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பட்டாசுக் குப்பைகளை மற்ற எந்தக் குப்பைகளுடனும் கலக்காமல் தினந்தோறும் வகைப்படுத்திய குப்பையைப் பெற வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் தனியாக ஒப்படைக்க வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைப் போலவே இந்த வருடமும் பட்டாசுக் குப்பைகள் தனியாகச் சேகரிக்கப்பட்டு, கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தும் செயலாக்க நிலையத்திற்கு ( Resustainability IWM Solutions Limited ( Tamilnadu Waste Management Limited ) Facility) அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை வெடிப்பது, மேலும் மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகளை வெடிப்பது, குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிப்பது போன்றவற்றை மக்கள் தவிர்க்க வேண்டும்.

ஆகவே, பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் வெடித்து மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னையிலிருந்து தீபாவளி சிறப்புப்பேருந்துகள் சேவை தொடக்கம் - இன்று 1,500 பேருந்துகள் இயக்கம்!

ABOUT THE AUTHOR

...view details