தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ஏரியா சபைகளின் விவரம் இணையதளத்தில் வெளியீடு - published on website

பொதுமக்களின் தகவலுக்காக பார்வையிடும் பொருட்டு சென்னை மாநகராட்சி ஏரியா சபைகளின் விவரத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது

சென்னை மாநகராட்சி ஏரியா சபைகள் விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு
சென்னை மாநகராட்சி ஏரியா சபைகள் விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு

By

Published : Dec 23, 2022, 7:09 AM IST

சென்னை: பொதுமக்களின் தகவலுக்காக சென்னையில் ஒவ்வொரு வார்டிலும் அமைக்கப்பட்டுள்ள ஏரியா சபைகளின் விவரத்தை சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அரசாணை (நிலை) எண். 92 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்)துறை நாள்: 24.06.2022-ன்படி மாநகராட்சிகளில் ஒவ்வொரு வார்டிலும் 10 எரியா சபைகள் மற்றும் ஒரு வார்டு குழுவினை ஏற்படுத்த விதிகள் வகுக்கப்பட்டது.

அதன்படி சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் ஏரியா சபைகள் அமைக்கப்பட்டு, சென்னை மாவட்ட அரசிதழ் எண். 5ண்படி, கடந்த 20 ஆம் தேதி - அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின் மென்நகல் மற்றும் வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள ஏரியா சபைகள் அடங்கிய வரைபடத்தின் மென்நகல் ஆகியவை பொதுமக்களின் தகவலுக்காகவும், பார்வையிடும் பொருட்டும், பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில், http://chennaicorporation.gov.in/gcc/area_sabha என்ற இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரையாண்டுத் தேர்வு விடுமுறையிலும் சிறப்பு வகுப்பு.. ஆசிரியர்கள் கொந்தளிப்பு..

ABOUT THE AUTHOR

...view details