தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வார்டு மேம்பாட்டு நிதியில் ரூ.11.65 கோடி பயன்படுத்த முடியாத நிலை: சென்னை மாநகராட்சி - funds spent by councilors zone wise

சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கு வார்டு மேம்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.70 கோடியில் இதுவரை அனைத்து பணிகளும் சேர்த்து 58.35 கோடி ரூபாய்க்கான பணிகள் தான் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மீதம் 11.65 கோடி ரூபாய் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Chennai Corporation
சென்னை மாநகராட்சி

By

Published : Mar 12, 2023, 3:28 PM IST

சென்னை: சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத காரணத்தால் கவுன்சிலர்கள் இல்லாமல் 2016 முதல் 2022 ஆண்டு வரை சென்னை மாநகராட்சியில் ஆணையர், துணை ஆணையர்கள், பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் என அனைவரும் மாநகராட்சி பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக சார்பில் போட்டியிட்டு மொத்தமுள்ள 200 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் 175-க்கு மேல் வார்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். அதன் பின்னர் மார்ச் மாதம் முதல் மேயர் பிரியா தலைமையில் கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்.

கவுன்சிலர்கள் பொறுப்பேற்றதை அடுத்தடுத்து நடந்த மாமன்ற கூட்டத்தில், தங்களது வார்டு மேம்பாட்டு நிதியை அதிகரிக்க வேண்டும் என்று பல மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதையேற்று, 30 லட்சம் ரூபாயாக இருந்த மேம்பாட்டு நிதி 35 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது அனைத்து விலையும் அதிகமாகிவிட்டது எனவே அந்த நிதியும் போதவில்லை என கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது கவுன்சிலர்கள் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. அதில், மொத்தமுள்ள ரூ.70 கோடி வார்டு மேம்பாட்டு நிதியில், 66.32 கோடி ரூபாய் மதிப்பில் 660 பணிகளை மேற்கொள்ள கவுன்சிலர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், 58.35 கோடி ரூபாய் மதிப்பில் 559 பணிகளுக்கு ஒப்பம் கோரப்பட்டுள்ளது. ஆனால் 34.80 கோடி ரூபாய் மதிப்பில் 406 பணிகளுக்கு மட்டுமே இதுவரை ஒப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 3.17 கோடி ரூபாய் மதிப்பில் 46 பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மண்டல வாரியாக கவுன்சிலர்கள் செலவிட்ட நிதி விபரம்:

S.No மண்டலங்கள் பணிகளின் எண்ணிக்கை தொகை (ரூ)
1. திருவொற்றியூர் 58 3.68 கோடி
2. மணலி 25 2.64 கோடி
3. மாதவரம் 39 2.75 கோடி
4. தண்டையார்பேட்டை 9 73 லட்சம்
5. ராயபுரம் 24 3.70 கோடி
6. திரு.வி.க.நகர் -0- -0-
7. அம்பத்துார் 39 3.83 கோடி
8. அண்ணாநகர் 24 1.55 கோடி
9. தேனாம்பேட்டை 23 1.72 கோடி
10. கோடம்பாக்கம் 25 2.31 கோடி
11. வளசரவாக்கம் 25 2.73 கோடி
12. ஆலந்துார் 45 2.72 கோடி
13. அடையாறு 20 2.21 கோடி
14. பெருங்குடி 22 1.88 கோடி
15. சோழிங்கநல்லுார் 28 2.33 கோடி
மொத்தம் 406 34.80 கோடி

2022 – 23 ம் நிதியாண்டு முடிய சில நாட்களே உள்ள நிலையில், ஏற்கெனவே ஒப்பம் அளிக்கப்பட்டது மற்றும் புதிதாக ஒப்பம் கோரப்பட்டது என கணக்கிட்டால் 58.35 கோடி ரூபாய்க்கான பணிகள் தான் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மீதம் 11.65 கோடி ரூபாய் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பேச்சு - சீமான் மீது வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details