சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சராசரியாக 4,880 மெட்ரிக் டன் குப்பைகள் உருவாகிறது. இவ்வாறு சேர்க்கப்படும் குப்பைகளை தரம் பிரிப்பது என்பது சவாலான ஒன்று.
திடக்கழிவுகளை உருவாக்குபவர்களே அதற்கு பொறுப்பு - சென்னை மாநகராட்சி - corporation
சென்னை: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு உற்பத்தியாளர்கள் மக்கும் குப்பையை தங்கள் வளாகத்திலேயே கையாள வேண்டும் எனவும், மக்காத உலர் குப்பையை மறு சுழற்சி செய்ய வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.
எனவே இது குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளதாவது:”நாள் ஒன்றுக்கு 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவு உற்பத்தி செய்யும் (அ) 5000 ச.மீ. பரப்பளவு கொண்ட மற்றும் அதற்கு மேல் பரப்பளவு கொண்ட வளாகத்தின் உரிமையாளர்களாகிய பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள் தங்கள் வளாகத்திற்குள்ளேயே திடக்கழிவுகளை மக்கச்செய்து, மக்காத குப்பைகளை தரம் பிரித்து மறு சுழற்சியாளர்களிடம் ஒப்படைக்கவும் வேண்டும்.
மேலும் அதிகளவில் திடக்கழிவை உருவாக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், உணவகங்கள், வணிக வளாகங்கள், விடுதிகள், தொழிற்சாலைகள், இதர பிற நிறுவனங்கள் தாங்கள் உருவாக்கும் திடக்கழிவுகளை தாங்களே கையாள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.