தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

28 மாநகராட்சி பள்ளிகள் விரைவில் டிஜிட்டல் மயம்! - corporation school degitalized soon

சென்னை: சென்னை சீர்மிகு நகரம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து சிட்டிஸ் (CITIIS) திட்டத்தின் மூலம், 28 மாநகராட்சி பள்ளிகளை விரைவில் டிஜிட்டல் மயமாக்க உள்ளது.

28 மாநகராட்சி பள்ளிகள் விரைவில் டிஜிட்டல் மயமாக உள்ளது
28 மாநகராட்சி பள்ளிகள் விரைவில் டிஜிட்டல் மயமாக உள்ளது

By

Published : Feb 27, 2021, 3:00 PM IST

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட, சென்னைப் பள்ளி ஆசிரியர்களுக்கான தகவல் தொழில்நுட்ப பயிற்சி பட்டறையை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் இறையன்பு ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நேற்று (பிப்.26) தொடங்கிவைத்தார்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளை உலகத்தரத்திற்கு மேம்படுத்தும் பணியை சென்னை சீர்மிகு நகரம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து சிட்டிஸ் (CITIIS) திட்டத்தின் மூலம் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் 28 மாநகராட்சி பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்படும், இத்திட்டத்தில் மாநகராட்சி பள்ளிகளின் கல்வித்தரம், உட்கட்டமைப்பு டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

இதன் முதற்கட்டமாக, அனைத்து மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கும் தகவல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளிக்க, மூன்று நாள்கள் பயிற்சி பட்டறைகள் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் ஆசிரியர்களுக்கு கணினி மற்றும் டிஜிட்டல் போர்டுகளை பயன்படுத்துவது குறித்தும், இணையதள வசதிகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை தெளிவாகவும், திறமையாகவும் கையாளுவது குறித்தும், பயிற்சியளிக்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஆணையர் கோ.பிரகாஷ், அண்ணா மேலாண்மை நிறுவன கூடுதல் இயக்குநர் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் ஆனந்த், மாநகராட்சி உதவி கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்த திமுக!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details