கரோனா வைரஸ் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் பல பகுதிகளில் குறைந்து வந்தாலும், அண்ணா நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை போன்ற பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்க மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இருப்பினும் நோயின் தாக்கம் குறையாமல் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
இதுவரையிலும் சென்னையில் மொத்தம் 2 லட்சத்து ஆயிரத்து 195 பேர், இந்தக் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 104 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள ஆறாயிரத்து 422 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், மூன்றாயிரத்து 669 நபர்கள், இந்த கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இதனால் குணமடைந்தவர்களின் விழுக்காடு 95ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் மூன்று விழுக்காடாக குறைந்துள்ளது. தண்டையார்பேட்டையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு விழுக்காடாக உள்ளது. அதேபோல், பெருங்குடி, திரு.வி.க.நகர், மணலி ஆகிய மூன்று மண்டலங்களில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை இரண்டு விழுக்காடாக உள்ளது.
இந்நிலையில், சிகிச்சைப் பெற்று வருபவர்களின் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,
ராயபுரம் - 310 நபர்கள்
தண்டையார்பேட்டை - 232 பேர்
தேனாம்பேட்டை - 405 பேர்
கோடம்பாக்கம் - 474 பேர்
அண்ணா நகர் - 489 பேர்