தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா நகரில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

சென்னை: அண்ணா நகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அண்ணா நகர் கரோனா பாதிப்பு  சென்னை மாநகராட்சி நிர்வாகம்  சென்னை கரோனா பாதிப்பு நிலவரம்  Chennai Corona Update Status  Chennai Corporation  Anna Nagar Corona updates
Anna Nagar Corona updates

By

Published : Dec 9, 2020, 1:05 PM IST

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் குறிப்பாக, அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற மண்டலங்களில் கரோனா பாதிப்பு சற்று அதிகரித்தே காணப்படுகிறது.

இருப்பினும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் 400-க்கும் குறைவாகவே உள்ளது. தொற்றுப் பரவும் பகுதியில், தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு அந்தந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்களை நடத்துவது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், அண்ணா நகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுவரையிலும் இரண்டு லட்சத்து 18 ஆயிரத்து 198 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், இரண்டு லட்சத்து 11 ஆயிரத்து 61 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மீதமுள்ள மூன்றாயிரத்து 252 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்றாயிரத்து 885 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், மண்டல வாரியான பாதிக்கப்பட்டோரின் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அண்ணா நகர் - 24 ஆயிரத்து 11 பேர்

கோடம்பாக்கம் - 23 ஆயிரத்து 508 பேர்

தேனாம்பேட்டை - 20 ஆயிரத்து 917 பேர்

ராயபுரம் - 19 ஆயிரத்து 292 பேர்

அடையாறு - 17 ஆயிரத்து 416 பேர்

திரு.வி.க. நகர் - 17 ஆயிரத்து 390 பேர்

தண்டையார்பேட்டை - 16 ஆயிரத்து 873 பேர்

அம்பத்தூர் - 15 ஆயிரத்து 446 பேர்

வளசரவாக்கம் - 13 ஆயிரத்து 808 பேர்

ஆலந்தூர் - எட்டாயிரத்து 891 பேர்

பெருங்குடி - எட்டாயிரத்து 9 பேர்

திருவொற்றியூர் - ஆறாயிரத்து 669 பேர்

மாதவரம் - ஏழாயிரத்து 907 பேர்

சோழிங்கநல்லூர் - ஐந்தாயிரத்து 806 பேர்

மணலி - மூன்றாயிரத்து 462 பேர்.

இதையும் படிங்க:கரோனா: சோழிங்கநல்லூரில் 1%க்கும் கீழ் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details