தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடம்பாக்கம், அண்ணா நகரில் கரோனா தொற்று அதிகம்!

சென்னை : கோடம்பாக்கம், அண்ணா நகர் ஆகிய இடங்களில் கரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Corona infection
Corona infection

By

Published : Sep 19, 2020, 2:09 PM IST

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையார் போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்தப் பரவலை குறைப்பதற்கு அப்பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள், மக்களுக்கு தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அண்ணா நகர், கோடம்பாக்கம் பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்த இரண்டு மண்டலங்களில் மட்டும் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் உள்ளது.

இவற்றுக்கு அடுத்தபடியாக ராயபுரம் உள்ளது. நோய்த் தொற்று அதிகரித்து வந்தாலும் குணமடைந்தோரின் விழுக்காடு 92 சதவிகிதமாக உள்ளது. சிகிச்சைப் பெற்று வருபவர்களில் விழுக்காடு ஆறு சதவிகிதமாக உள்ளது.

இதுவரை சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 616 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 633 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மூன்றாயிரத்து 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி,

கோடம்பாக்கம் - 17 ஆயிரத்து 321 பேர்

அண்ணா நகர் - 17 ஆயிரத்து 204 பேர்

ராயபுரம் - 14 ஆயிரத்து 806 பேர்

தேனாம்பேட்டை - 14 ஆயிரத்து 595 பேர்

தண்டையார்பேட்டை - 12 ஆயிரத்து 699 பேர்

திரு.வி.க. நகர் - 11 ஆயிரத்து 745 பேர்

அடையாறு - 11 ஆயிரத்து 877 பேர்

வளசரவாக்கம் - 9 ஆயிரத்து 864 பேர்

அம்பத்தூர் - 10 ஆயிரத்து 826 பேர்

திருவொற்றியூர் - 4 ஆயிரத்து 828 பேர்

மாதவரம் - 5 ஆயிரத்து 471 பேர்

ஆலந்தூர் - 6 ஆயிரத்து 37 பேர்

சோழிங்கநல்லூர் - 4 ஆயிரத்து 348 பேர்

பெருங்குடி - 5 ஆயிரத்து 278 பேர்

மணலி - 2 ஆயிரத்து 374 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details