தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நான்தான் கரோனா வைரஸ்..!' - நூதன விழிப்புணர்வால் அசத்தும் கரோனா போலீஸ்! - கரோனா ஹெல்மெட் விழிப்புணர்வு

சென்னை: கரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் காவல் ஆய்வாளர் ஒருவர் நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.

Chennai
Chennai

By

Published : Mar 28, 2020, 2:56 PM IST

கரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து சுகாதாரத் துறை, காவல் துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் குறித்தும், நோய்த் தொற்றின் தீவிரம் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர்.

கரோனா, தொற்று நோய் என்பதால் மக்கள் நடமாட்டத்தை குறைக்கவும், நோய் பரவாமல் தடுக்கவும் நாடு முழுவதும் 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், வைரஸின் தீவிரத்தை உணராத வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஆங்காங்கே சுற்றித்திரிகின்றனர்.

இதனிடையே, பொதுமக்களிடையே நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் ரஜிஸ்பாபு என்பவர் கரோனா வைரஸ் வடிவிலான தலைக்கவசம் அணிந்துகொண்டு, பாடி மேம்பாலத்தில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தேவையில்லாமல் வெளியே சுற்றும் வாகன ஓட்டிகளை மறித்து, அவர்களிடம் கரோனா வைரஸின் தீவிரம் குறித்தும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும் எச்சரித்தார்.

நூதன முறையில் கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆய்வாளர் ரஜிஸ்பாபு

இதுகுறித்து பேசிய அவர், “கரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு குறைவாக உள்ளதால், இதுபோன்று பயமுறுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்துகொண்டு, பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இதுபோன்ற விழிப்புணர்வு பணியில் ஈடுபடுகிறோம்” என்றார்.

காவல் ஆய்வாளர் மேற்கொண்ட இந்த நூதன முறை விழிப்புணர்வு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க:'கை கழுவுவோம், கரோனாவை விரட்டுவோம்'- கேரள காவலர்கள் விழிப்புணர்வு நடனம்!

ABOUT THE AUTHOR

...view details