கரோனா தொற்று பாதிப்பால் உலகளவில் ஒன்றரை கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிப்பு ஐந்து லட்சத்தைத் தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை 23 பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 9 பேரும், ஓமந்தூரார் மருத்துவ மனையில் 3 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.