தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட மத்தியக் குழு

சென்னை: காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு அறையை மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர்.

Control room  கரோனா கட்டுப்பாட்டு அறை  காவல் கட்டுப்பாட்டு அறை  சென்னை கரோனா கட்டுப்பாட்டு அறை  Chennai corona Control room  Police Control room
Chennai corona Control room

By

Published : May 1, 2020, 1:41 PM IST

சென்னையில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து மத்தியக் குழுவினர் ஆறு நாள்களாகப் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வை மேற்கொண்டுவருகின்றனர்.

அதில், முதலாவதாக பொதுமக்களுக்குச் சேவை செய்துவரும் தன்னார்வலர்களைச் சந்தித்து ஆலோசனைகளை வழங்கினர். இதையடுத்து, சாந்தோம் பகுதியில் உள்ள நகர்ப்புற பொது சுகாதார மையத்திற்கு சென்று செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர்.

பின்னர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் சென்று தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகழுவுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி விளக்கினர்.

இதைத் தொடர்ந்து, துரைப்பாக்கம் பகுதியில் உள்ள வென்ட்டிலேட்டர் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஆய்வு நடத்தியதையடுத்து, காவல் துறைத் தலைவர் ஜே.கே. திரிபாதியை நேரில் சந்தித்து அங்கு செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளைக் கேட்டறிந்தனர்.

ஆய்வுமேற்கொள்ளும் மத்தியக் குழுவினர்

இந்நிலையில், இன்று வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையை மத்தியக் குழுவினர் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளைக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனிடம் கேட்டறிந்தனர்.

இதையும் படிங்க:கோயம்பேடு மார்க்கெட்டில் காவல் ஆணையர் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details