தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 56ஆக குறைந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

சென்னை: மாநகராட்சி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 56ஆக குறைந்துள்ளது என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

chennai containment zones reduced at 56 said chennai corporation
chennai containment zones reduced at 56 said chennai corporation

By

Published : Aug 1, 2020, 5:28 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பால் சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். வைரஸ் பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, மக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, மருத்துவ முகாம் என மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டுவருகிறது.

இந்தப் பரவலைத் தடுக்கும் நோக்கில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் முழு தெருவையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்திருந்தது. இது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதால் ஒரு தெருவில் மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தொற்று இருந்தால் மட்டும் தெருவை தனிமைப்படுத்தி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்து வருகிறது.

இதையடுத்து, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குணமடைந்தோரின் விழுக்காடு தினமும் அதிகரித்து வருவதால் கட்டுப்பாட்டு பகுதிகளும் குறைந்து வருகிறது. தற்போது சென்னையில் 56 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மட்டுமே இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மண்டல வாரியான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,

தண்டையார்பேட்டை - 1

அம்பத்தூர் - 17

அண்ணா நகர் - 16

தேனாம்பேட்டை - 3

கோடம்பாக்கம் - 18

வளசரவாக்கம் - 1

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அடுத்த 14 நாள்களுக்கு எந்த நோய் தொற்றும் ஏற்படவில்லை என்றால் அவை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து நீக்கப்படும்.

ABOUT THE AUTHOR

...view details