தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ஒன்றாக குறைந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதி - சென்னை மாநகராட்சி நிர்வாகம்

சென்னை: சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி ஒன்றாக குறைந்துள்ளது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

chennai containment zone reduced in one
chennai containment zone reduced in one

By

Published : Nov 2, 2020, 4:48 PM IST

சென்னையில் தற்போது கரோனா தொற்று பரவலின் வேகம் குறைந்து வருகிறது. அதுமட்டுமின்றி, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் விழுக்காடும் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, மக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, மருத்துவ முகாம்கள் அமைப்பது என மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் ஒரு தெருவில் ஒருவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால் முழு தெருவையும் முதலில் மாநகராட்சி அடைத்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து வந்தது. இது மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தியதால் ஒரு தெருவில் மூன்று முதல் ஐந்து வீடுகளில் தொற்று இருந்தால் மட்டுமே தெருவைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்து வருகிறது.

இதையடுத்து, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குணமடைந்தோரின் விழுக்காடு தினமும் அதிகரித்து வருவதால் கட்டுப்பாட்டுப் பகுதிகளும் குறைந்து வந்தது. ஒரு மாதத்திற்கு முன் கிட்டத்தட்ட 70ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தற்போது ஒன்றாக மாறியுள்ளது. ஏப்ரல், மே மாதத்தில் 500க்கும் மேற்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தது செப்டம்பர் மாதம் அது பூஜ்ஜியமாக மாறியது.

மீண்டும் கடந்த மாதம் கரோனா பரவல் அதிகரித்தது. தற்போது தொற்றின் தாக்கம் குறைந்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதி ஒன்றாக குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details