தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பணிகள் நிறைவடையாத மெட்ரோ சேவை; அரசியலுக்காக அவசரம் காட்டும்  அரசு’ - காங்கிரஸ் குற்றச்சாட்டு!

சென்னை: பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ சேவை நாளை திறக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

By

Published : Feb 13, 2021, 3:14 PM IST

நிறைவடையாத மெட்ரோ சேவையை நாளைக்கு திறக்க அவசரம் காட்டும் அரசு’ -காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு!
நிறைவடையாத மெட்ரோ சேவையை நாளைக்கு திறக்க அவசரம் காட்டும் அரசு’ -காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு!

பிரதமர் நரேந்திர மோடி நாளை (பிப்.14) தமிழ்நாடு வரும் நிலையில், அவர் சென்னையில் பல்வேறு திட்டங்களைத் தொடக்கி வைக்க இருக்கிறார். இதில், வடசென்னை பகுதியில் அமைந்திருக்கும் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையையும் தொடக்கி வைக்கிறார்.

இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் அவசர கதியில் நடைபெற்று வருகின்றது. ஆனால் மேல்புறத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், பயணிகள் செல்லக்கூடிய மெட்ரோ ரயில் நிறுத்தங்களில் பணிகள் முழுவதும் முடிவடையாமல் இருந்து வருகிறது. இதனை காங்கிரஸ் கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ். திரவியம், பகுதி செயலாளர்கள், கட்சித் தொண்டர்கள் முன்னிலையில் நேற்று (பிப்.12) நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார்.

நிறைவடையாத மெட்ரோ சேவையை நாளைக்கு திறக்க அவசரம் காட்டும் அரசு’ -காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு!

அப்போது பேசிய எம்.எஸ்.திரவியம், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அவசர கதியில் வடசென்னையில், மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும், தற்பொழுது பிரதமர் மோடியால் திறக்கப்ப இருக்கிற வடசென்னையின் மெட்ரோ ரயில் சேவையால் பொதுமக்களுக்கு பாதிப்பு நேரிடக் கூடும் என்பதனால் இத்திட்டத்தினை கைவிடவேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க...மீண்டும் உயர்ந்த முட்டை விலை

ABOUT THE AUTHOR

...view details