தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கரோனா! - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கரோனாத் தொற்று
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கரோனாத் தொற்று

By

Published : Jan 28, 2022, 3:39 PM IST

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு, கடந்த 26ஆம் தேதி இரவு முதல் உடல் வலி மற்றும் லேசான காய்ச்சல் இருந்துள்ளது.

இதன் காரணமாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு நேற்று (ஜன.27) பரிசோதனை முடிவுகள் வெளியானதில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டார்.

கடந்தாண்டு நெஞ்சுவலி காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை பெற்று ஒரு வார காலம் ஓய்வில் இருந்து பின்னர் மீண்டும் பணிக்குத் திரும்பிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடர்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தார். குடியரசு தின விழா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

தற்போது சங்கர் ஜிவாலுக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் அவரது மகளுக்கும் தொற்று ஏற்பட்டதாகவும், தற்போது அவர் சிகிச்சை முடிந்து மீண்டு வந்த நிலையில் நேற்று (ஜன.27) காவல் ஆணையருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாலும் தொடர்ந்து வீட்டிலிருந்து அன்றாடப் பணிகளை ஆணையர் மேற்கொள்வார் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:நடிகர் விஜய் சொகுசு கார் இறக்குமதி வழக்கு: நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை!

ABOUT THE AUTHOR

...view details