தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எஸ்.வி சேகர் மீதான நடவடிக்கை எப்போது?’ - காவல் ஆணையர் பதில்! - sv sekar case

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு பரப்பிய எஸ்.வி. சேகர் மீதான புகார் சட்ட ஆலோசனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த அறிக்கை வந்த பின் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

எஸ்வி சேகர் வழக்கு விபரம்  மகேஷ்குமார் அகர்வால்  சென்னை செய்திகள்  chennai news  sv sekar case  chennai city commissioner
'எஸ்.வி. சேகர் மீதான புகார் சட்ட ஆலோசனைக்கு அனுப்பப்பட்டுள்ளது' - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

By

Published : Aug 13, 2020, 3:12 AM IST

புதுப்பேட்டை ராஜரத்தினம் மைதானத்தில் ஆயுதப்படை காவலர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட ஆவின் பார்லரை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் திறந்துவைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சுதந்திர தினத்தையொட்டி 15ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

விடுதிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும். வாகன சோதனைச் சாவடி அமைத்து தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபடவுள்ளோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறாக சித்தரித்த, பாஜக நிர்வாகி எஸ்.வி. சேகர் மீது வந்த புகார், சட்ட ஆலோசனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கையின் அடிப்படையில் சட்டப்படியான நடவடிக்கையில் ஈடுவோம்.

சைபர் குற்றங்களைத் தடுக்கும் விதமாக காவல் ஆணையர் அலுவலகத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. சுதந்திர தின விழாவையொட்டி போதுமான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான அழைப்பிதழ் வழங்கப்பட்டு உள்ளது. கொடியேற்றும் விழாவை பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க:'பாஜகவின் கரும்புள்ளி எஸ்.வி. சேகர்' - அமைச்சர் காமராஜ்

ABOUT THE AUTHOR

...view details