சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் காவல் துறையால் 1902ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டடம், தற்போது புனரமைக்கப்பட்டு திருவல்லிக்கேணி காவல் துறை துணை ஆணையர் அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை இன்று (அக். 27) சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் திறந்துவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்தியாவிலேயே பழமைவாய்ந்த கட்டடங்களில் ஒன்றான எழும்பூரில் உள்ள சென்னை காவல் துறை பழைய காவல் ஆணையர் அலுவலக கட்டடத்தை, காவல் துறை அருங்காட்சியகமாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
பணிகள் முடிவடைந்து காவல் துறை அருங்காட்சியகம் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் திறப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.