தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் மட்டும் 2.10 லட்சம் கரோனா பரிசோதனை: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: சென்னையில் மட்டும் இதுவரை 2.10 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை சென்னை ஆணையர் chennai corona test no corona test count in chennai chennai commissioner சென்னையில் கரோனா பரிசோதனைகள்
சென்னை ஆணையர் பிரகாஷ்

By

Published : Jun 19, 2020, 5:44 PM IST

Updated : Jun 19, 2020, 9:40 PM IST

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "சென்னையில் இதுவரை 2.10 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 40,882 பேருக்கு மருத்துவ முகாம்கள் மூலம் தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. நகரில் அனைத்துப் பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் பொதுமக்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளின் அருகில் இருக்கும் மருத்துவ முகாம்களில் சென்று தங்களை பரிசோதனைகளுக்கு உட்படுத்திக் கொள்ளலாம். அனைத்து மண்டலங்களிலும் நோய்க் கட்டுப்பாட்டு தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொற்று உள்ளவர்கள் தங்களை தனிமைப் படுத்திக்கொள்ளாமல் வெளியில் சுற்றுவதால் தான் நோய்த் தொற்று அதிகரிக்க காரணமாக உள்ளது.

காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பின் தயங்காமல் அருகில் உள்ள மருத்துவ முகாம்களை நாடலாம். வீடுகளில் கரோனா சோதனைகள் செய்ய வரும் ஊழியர்களிடம் எந்த வித ஒளிவுமறைவும் இல்லாமல் அறிகுறிகள் குறித்து தெரிவிக்க வேண்டும். ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த வீட்டில் உள்ள அனைவரையும் தொற்று இருப்பவர்களாகவே கருதி அடுத்தக்கட்ட சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்றார்.

இதையும் படிங்க:கரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து கவிதை வெளியிட்ட அமைச்சர் விஜய பாஸ்கர்!

Last Updated : Jun 19, 2020, 9:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details