'மனிதர்களை மட்டுமல்ல... மரங்களையும் காப்போம்' - மரக்கன்றுகளை நட்ட போலீசார்!
சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் மரக்கன்றுகள் நட்டார்.
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சுற்றுச் சூழலை மேம்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடுவது போன்று நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், இன்று சென்னை காவல் துறை சார்பாக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மரக்கன்றுகளை நட்டார். இதில் காவல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் உள்ளிட்ட பல்வேறு காவல் துறை அலுவலர்களும் கலந்துக்கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.