தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணிக்கை மையங்களில் நான்கு அடுக்கு பாதுகாப்பு - காவல் ஆணையர் தகவல்! - mahesh kumar Aggarwal on vote counting

சென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது மையங்களில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக, சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார்.

காவல் ஆணையர் தகவல்
சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார்

By

Published : Apr 27, 2021, 3:27 PM IST

சென்னை அண்ணா பல்கலை புதிய ஏசி டெக் வளாகத்தில், கரோனா தொற்றால் பாதிப்படைந்த காவலர்கள், அவர்களின் குடும்பத்தினர் சிகிச்சை பெறும் விதமாக, காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட கோவிட் கேர் சென்டர் Phase-II மையத்தை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 324 காவல்துறையினர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல்துறையினர், அவர்களின் குடும்பத்தாரின் பாதுகாப்பு கருதி, இந்த வளாகத்தில் கோவிட் கேர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் மருத்துவர்கள் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றனர்.

சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால்

அதுமட்டுமல்லாமல் இங்கு காவல்துறையினருக்கு மூச்சுப் பயிற்சி அளிக்க வல்லுனர்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு காவலர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க, சுகாதாரமான உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 34 காவலர்கள், அவர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 39 பேர் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை காவல்துறையில் 17 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டுள்ளனர்.

ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னை உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு, பிரச்னை சீரானப்பின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையின்போது, தேர்தல் ஆணையம் அளித்துள்ள வழிகாட்டுதலின்படி நடக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் நான்கு அடுக்குப் பாதுகாப்பு அமைக்கப்படவுள்ளது. முதல் அடுக்கில் மத்திய பாதுகாப்புப் படையினர், இரண்டாம் அடுக்கில் சிறப்பு காவல் படையினர், மூன்றாம் அடுக்கில் உள்ளூர் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

இது தவிர்த்து வெளியில் கொண்டாட்டங்களை கண்காணிக்க கூடுதல் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார்.

இதையும் படிங்க:வேகமாக பரவும் கரோனா இரண்டாம் அலை- எச்சரிக்கும் மருத்துவர்

ABOUT THE AUTHOR

...view details