தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘ரவுடி லிஸ்ட் ரெடி...குற்றம் செய்தால் உடனடி நடவடிக்கைதான்’ -காவல் ஆணையர்...!

சென்னை: சென்னையில் ரவுடிகள் பட்டியலிடப்பட்டுள்ளதால், குற்றம் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் மகேஸ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தைதொடங்கி வைத்தகாவல் ஆணையர் மகேஸ்குமார் அகர்வால்
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தைதொடங்கி வைத்தகாவல் ஆணையர் மகேஸ்குமார் அகர்வால்

By

Published : Oct 2, 2020, 8:02 PM IST

ரவுடிகள் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்றம், ரவுடிகளை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என இரண்டு வார காலத்திற்குள் பதிலளிக்க காவல் ஆணையருக்கு உத்தரவிட்டது.

அப்போது ரவுடிகளை ஒழிக்க தமிழ்நாட்டில் புதிய சட்ட வரைவு கொண்டு வரப்படுவதாகவும் காவல் துறை தரப்பில் நேற்று (அக். 1) தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையரகத்தில் நடந்த நிகழ்வில், ரவுடிகள் விவகாரம் தொடர்பாக காவல் ஆணையரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த காவல் ஆணையர் மகேஸ்குமார் அகர்வால், “சென்னையில் குற்றங்களின் அடிப்படையில் ரவுடிகள் வகைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து குற்றச் செயல்பாடுகளில் இருப்பவர்கள் யார்? யார்? என கண்காணிப்படுகிறது. அதனால், அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

காவல் ஆணையர் மகேஸ்குமார் அகர்வால் செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து பேசிய அவர், ஐந்தாம் கட்ட ஊரடங்கு நீடித்து வரும் நிலையில், வீடியோ கால் மூலம் புகார் கொடுப்பது பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளதாகவும், அதே வேளையில் நேரடியாக வந்து புகார் அளிப்பதில் எந்த தடையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

விழிப்புணர்வு வாகனத்தைதொடங்கி வைத்த காவல் ஆணையர் மகேஸ்குமார் அகர்வால்

முன்னதாக, கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தை காவல் ஆணையர் மகேஸ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க...விவசாயிகளுக்கு அநீதி இழைக்கும் பிரதமர் மோடி - சோனியா காந்தி குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details