கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களின் குடும்பத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து மேற்படிப்புக்கு காத்திருக்கும் மாணவ, மாணவிகளுக்கு, அவர்கள் விரும்பும் கல்லூரிகளில், விரும்பும் படிப்புகளில் சேர சென்னை பெருநகர காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு கல்லூரியில் இடம் கிடைத்த காவலர் குடும்பத்தின் மாணவர்களுக்கு, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் சேர்க்கை கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சி இன்று (செப்.2) நடைபெற்றது.
புதுப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்,
"இதுவரை 123 மாணவ- மாணவிகளுக்கு விரும்பும் கல்லூரியில் சேர இடம்பெற்றுக் கொடுத்துள்ளதாகவும், கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் இருந்து கட்டணமில்லாமலும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
சென்னையில் போதைப்பொருள் கும்பலைக் கூண்டோடு பிடிக்க ஸ்கெட்ச்! - chennai news
சென்னையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை ஒட்டுமொத்தமாகப் பிடிக்க, "Drive against Drug" திட்டத்துடன் காவல் துறை களமிறங்கியுள்ளதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் போதைப்பொருள் கும்பலை கூண்டோடு பிடிக்க போடப்பட்டுள்ள ஸ்கெட்ச்
பெண் காவலரைத் தாக்கி வழிப்பறி செய்ய முயன்ற சம்பவத்தைச் சுட்டிக் காட்டி, சென்னையில் தளர்வு ஏற்பட்டுள்ள சூழலில் வழிப்பறி, நகை பறிப்பு அதிகரித்திருப்பது குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர் எந்த குற்றச்சம்பவமாக இருந்தாலும் 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதாகக் கூறினார்.
அதேபோல, கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வந்த ஊர்க்காவல் படையினருக்கு ஊதியம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் விரைவாக செய்யப்பட்டு வருவதாகவும் சென்னை பெருநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.