தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வாகனங்களில் செல்ல வேண்டாம் - சென்னை ஆணையர்

சென்னை : அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வாகனங்களில் செல்ல வேண்டாம் என காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

chennai
chennai

By

Published : Apr 30, 2020, 8:54 AM IST

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னையில் கரோனா பரவலைத் தடுக்க அரசு நான்கு நாள்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தியிருந்தது. இந்த முழு ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்ததால் இன்று பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களைத் தடையின்றி வாங்குவதற்காகக் காலை ஆறு மணி முதல் மாலை ஐந்து மணி வரை பொருள்களை விற்க அனுமதி அளித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காகக் கூட்டம் கூட்டமாகச் செல்ல வேண்டாம். மேலும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

வாகனங்களில் சென்று பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதைத் தவிர்க்க வீட்டிற்கு அருகே பொருள்களை விற்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மேலும், கோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. சி.எம்.டி.ஏ, மாநகராட்சி தங்கு தடையின்றி அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க வழிவகை செய்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க :விழுப்புரத்தில் அரைசதம் அடித்தது கரோனா! பொதுமக்கள் பீதி

ABOUT THE AUTHOR

...view details