தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை இழந்த கல்லூரி மாணவி தற்கொலை!

சென்னையில் ஆன்லைன் டிரேடிங்கில் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Apr 3, 2023, 12:54 PM IST

che
பணம்

சென்னை: சென்னை ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த அருண்குமார் - சாந்தி தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். மூத்த மகள் மகாலட்சுமி தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இரண்டாவது மகள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அருண்குமார் - சாந்தி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக சாந்தி அருண்குமாரை பிரிந்து, தனது மகள்களோடு ஜோசப் என்பவருடன் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி இரவு வழக்கம் போல் சாந்தி, ஜோசப் மற்றும் இரண்டாவது மகளும் உறங்கிய நிலையில், மூத்த மகள் மகாலட்சுமி உறங்காமல் செல்போனை பயன்படுத்திக் கொண்டு இருந்துள்ளார். இரவு ஒரு மணி வரை தூங்காமல் செல்போனை பயன்படுத்தியதால், ஆத்திரமடைந்த சாந்தி போனை வைத்துவிட்டு தூங்கும்படி மகாலட்சுமியை திட்டியுள்ளார். அதற்கு மகாலட்சுமி அலாரம் வைத்துவிட்டு தூங்குவதாக தெரிவித்ததையடுத்து, சாந்தி உறங்கச் சென்றுவிட்டார்.

இதையடுத்து நேற்று(ஏப்ரல்.2) காலை 5 மணிக்கு எழுந்து பார்த்தபோது மகாலட்சுமி படுக்கை அறையில் இல்லை. பின்னர், ஹால் பகுதியில் சென்று பார்த்தபோது, மகாலட்சுமி தற்கொலை செய்து இறந்து கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சாந்தி கதறி அழுதார். பின்னர், ஜோசப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், மகாலட்சுமி ஆன்லைனில் டிரேடிங் செய்வதற்காக சிலருக்கு முப்பதாயிரம் ரூபாய் பணம் அனுப்பியதாகவும், அவர்கள் பணத்தை திருப்பி தராததால் அச்சமடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மாணவியின் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் பேராசிரியர் ஹரிபத்மன் கைது!

ABOUT THE AUTHOR

...view details