தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வட சென்னையில் விதிகளை மீறிச் செயல்படும் தொழிற்சாலைகள்! - சென்னை காலநிலை செயல்பாட்டு குழு

சென்னை: வட சென்னையில் தொழிற்சாலைகள் விதிகளை மீறி செயல்படுவதாக சென்னை காலநிலை செயல்பாட்டு குழு குற்றம்சாட்டியுள்ளது.

factories
factories

By

Published : Nov 7, 2020, 5:59 PM IST

வட சென்னையில் பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டுவருகின்றன. எண்ணூர், திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் காற்று, நீர் மாசு அதிகமாக ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக சென்னை காலநிலை செயல்பாட்டு குழு ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இதுகுறித்து அந்தக் குழு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, "மாசுபட்ட எண்ணூர், மணலி பகுதியின் ஒழுங்குமுறையில் கருத்துளை 60 விழுக்காடு முறையான நேரத்தில் பெரிய ஆலைகள் புகை வெளியேற்ற விதிகளைப் கடைப்பிடிப்பது இல்லை.

வட சென்னையில் அணுமின் நிலையம் உள்ளிட்ட ஆறு தொழிற்சாலைகளை கண்காணிக்க வேண்டியது தமிழ்நாடு மாசுகாட்டுப்பாடு தான். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை.

ஏற்கனவே வட சென்னையில் 34 ரெட் தொழிற்சாலைகள் உள்ளன. புது தொழிற்சாலை வர கூடாது. மேலும் தற்போது விதிகளை மீறி செயல்பட்டு இருப்பதை சரி செய்ய வேண்டும். மத்திய அரசு மாசு கட்டுபடுத்த 80 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அதை அதிகமாக வட சென்னையில் பயன்படுத்த வேண்டும்.

இந்த ஆய்விற்கு ஆவணங்கள் அனைத்தும் தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியத்திடம் தான் எடுக்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு மாசு காட்டுபாடு வாரியத்திடமும், சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளோம்" என்று கூறினர்.

ABOUT THE AUTHOR

...view details