சென்னை:சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனைத்து காவலர்கள் மற்றும் காவல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை இன்று (ஜூலை 12) அனுப்பியுள்ளார். அதில் "நுகர்வோர் அமைப்பு ஆய்வில் சுமார் 70 சதவீதம் பேர் தங்களுடைய வீட்டு உபயோக பொருட்களை முழுமையாக அணைத்து வைக்காமல், மின்சார இணைப்பு தொடர்ச்சியாக வரும் வகையில் பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், பயன்படுத்தாத மின்சாரத்திற்கும் சேர்த்து கட்டணம் செலுத்தியதும் தெரியவந்துள்ளது.
மின்சாதன பொருட்களின் பிரதான சுவிட்சை அணைக்காமல் இருந்தால், தொடர்ந்து மின்சாரம் நுகர்ந்து கொண்டே இருக்கும். குறிப்பாக ஏசி, டிவி, சார்ஜர் ஆகிய மின்சாதன பொருட்களின் பிரதான சுவிட்சை அணைக்காமல் விட்டால் ஆண்டுக்கு சுமார் 1000 ரூபாய் அளவிற்கு மின்சார கட்டணம் கூடுதலாக செலுத்த நேரிடுகிறது. சுமார் 174 யூனிட் அளவுக்கு மின்சார இழப்பை இது ஏற்படுத்துகிறது.